இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல்!

Date:

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவில் எதிர்வரும் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களில் இலங்கையின் நிலைமைகள் மீளாய்வு செய்யப்படவுள்ளது.

மனித உரிமை மீறல்கள், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், நீதித்துறையின் சுதந்திரம் போன்றவை குறித்து அங்கு விவாதிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக்க தலைமையில் இலங்கை தரப்பு கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 52ஆவது வழக்கமான அமர்வு தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது.

இலங்கை தொடர்பில் கடந்த அமர்வில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டம் தமது நாட்டுக்கு எந்த நன்மையையும் ஏற்படுத்தாது என ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி கருணாதிலகா தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...