‘The Elephant Whisperers’ சிறந்த தமிழ் ஆவண குறும்படமாக ஒஸ்காகரால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
‘ஹாலிவுட் திரைப்படங்களுக்கான 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடந்தது.
இந்த ஆவணப்படம் தமிழ்நாட்டின் முதுமலையில் யானை கூட்டத்தால் கைவிடப்பட்ட குட்டி யானைகளை பராமரித்த பழங்குடியின தம்பதி பொம்மன் – பெல்லி தம்பதியையும் அவர்கள் வளர்த்த ரகு என்ற யானையையும் மையமாக வைத்து வன புகைப்பட கலைஞர் கார்த்திகியால் உருவாக்கப்பட்ட ஆவணப்படமாகும்.
சிறந்த அனிமேஷன் திரைப்படமாக ‘கில்லர்மோ டெல் டோரோ’ஸ் பினோச்சியோ’ படம் தேர்வாகியுள்ளது. சிறந்த துணை நடிகராக ‘கே ஹுய் குவான்’ தேர்வாகியுள்ளார். “Everything Everywhere All at Once” என்ற திறைப்படத்திற்காக இந்த விருதினை அவர் வாங்கியுள்ளார்.
சிறந்த துணை நடிகையாக ‘ஜேமி லீ கர்டிஸ்’ தேர்வாகியுள்ளார். “Everything Everywhere All at Once” படத்திற்காக இந்த விருதினை அவர் பெற்றுள்ளார்.