நாளை (15) நடைபெறவுள்ள பணிப்புறக்கணிப்புக்கு தனியார் பஸ்கள் ஆதரவு வழங்காது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளைய தினம் பொதுமக்களின் பயண நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாது என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அந்த சேவைகளை நடத்துவதற்கு போதிய பஸ்கள் இல்லை என்றால் மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.