அரச நிதி தொடர்பான குழுவின் தலைவர் பதவியில் இருந்து மயந்த திஸாநாயக்க இராஜினாமா கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
அரசாங்க நிதிக்குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க குறித்த பதவியில் இருந்து விலகுவதாக சபாநாயகருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் அரசாங்க நிதிக்குழுவின் தலைவர் பதவியில் இருந்த ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா, அப்பதவியில் இருந்து அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக அதே கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தலைமைப் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.