பஸ் கட்டணங்களை எதிர்வரும் ஜூலை மாதத்துக்கு முன்னர் குறைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்
தற்போது நிலவுகின்ற தேர்தல் பிரசார நடவடிக்கைகள் காரணமாக பஸ்களுக்கு அதிக வருமானம் கிடைப்பதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்
எவ்வாறாயினும் இந்த ஆண்டின் முதல் 2 மாதங்களில் போராட்டங்கள் காரணமாக பஸ்களுக்கு 500 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக பொலிஸாரிடமும், மனித உரிமைகள் பேரவையிலும் முறைப்பாடு தெரிவிக்கவுள்ளதாக கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.