பாணின் விலையை மேலும் குறைக்கலாம்: வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம்

Date:

பாணின் விலையை மேலும் குறைக்க வாய்ப்புகள் உள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் அண்மையில் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவால் குறைத்தன.

இதனையடுத்து 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டது.

இந்தநிலையில் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமையினால் பாணின் விலையை மேலும் குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

அதேநேரம் மொத்த விற்பனையில் முட்டை ஒன்றின் விலை 56 ரூபாவால் அதிகரித்துள்ளமையினால் தங்களது உற்பத்திகளை மேற்கொள்வதில் பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...