மகளிர் தினத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட வேண்டுகோள்!

Date:

பெண்களுக்கு சம உரிமை வழங்குதல் நாடாளுமன்றிலிருந்து ஆரம்பமாகட்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலை உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டியது அவசியமானது, பெண்களுக்கான சமத்துவத்தை நாடாளுமன்றிலிருந்தே ஆரம்பிப்போம் என அவர் கோரியுள்ளார்.

இதேவேளை பெண்களின் வலுவூட்டல் மற்றும் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தும் கொள்கை கட்டமைப்பொன்று இன்று வெளியிடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

மேலும் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் சிறப்புரிமை மீறல்கள் தொடர்பான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை மீளாய்வு செய்ய வேண்டிய தருணம் வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...