இலங்கை பெற்ற கடன்களை மறுசீரமைக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் தொடர்பில் சர்வதேச நிதியம் மற்றும் இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த நாட்டில் செய்யப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்களில் 50% க்கும் அதிகமானவை சீனாவிடமிருந்து பெறப்பட்டவை மற்றும் ஜப்பான் மற்றும் இந்தியாவிலிருந்து கடன்களும் பெறப்பட்டன.
இதனால் இலங்கைக்கான வேலைத்திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூடிய விரைவில் மக்களுக்கு அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.