கிழக்கு மாகாணத்தில் புதிய முதலீட்டு வாய்ப்புகள்:கிழக்கு ஆளுநரை சந்தித்தார் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உயர்ஸ்தானிகர்!

Date:

இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் உயர்ஸ்தானிகர் H.E. Khaled Nasser Sulaiman Al Ameri க்கும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பிலும் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்தும் ஆராயப்பட்டது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள முதலீட்டாளர்களுக்கு கிழக்கு மாகாணத்தில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவதற்கான நிரந்தர வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் கிளையொன்றை நிறுவி ஐக்கிய அரபு இராச்சியத்தின் முதலீட்டாளர்களுக்குத் தெரிவிக்கும் முறைமை ஒன்றை ஏற்படுத்துமாறும் தூதுவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுற்றுலா மற்றும் இயற்கை விவசாயம் ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் வகையில் அந்த திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் அவர்கள் கவனம் செலுத்தினர்.

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் சுற்றுலா வலயங்களில் புதிய விளம்பரத் திட்டங்களை முன்னெடுக்குமாறும் தூதுவரிடம் ஆளுநர் கோரிக்கை விடுத்தார். இதுபற்றி விரைவில் அரசுக்கு தெரிவிப்பேன் என்று தூதுவர் கூறினார்.

இதேவேளை, ஐக்கிய அரபு இராச்சியம் 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டிலும் உலகிலும் பல பெறுமதிமிக்க கடற்பரப்புகளில் 10 மில்லியன் சதுப்புநில செடிகளை நடும் விசேட வேலைத்திட்டத்தை இந்த வருடம் ஆரம்பித்துள்ளதுடன், கிழக்கு மாகாணத்தின் கடல் திரையும் அந்த வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்படும்.

சந்திப்பின் இறுதியில் தூதுவருக்கும் ஆளுநருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...