அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினர் கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் அரசாங்கத்துக்கு எதிராக கண்டனப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் ஏராளமான பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் ஆயுதம் தாங்கிய படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.