நாடளாவிய ரீதியில் இன்று பணிப்புறக்கணிப்பு!

Date:

துறைமுகம், வங்கிகள், ஆசிரியர்கள், அரச, அரை அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள பல சேவைகள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

நாடு தழுவிய வேலைநிறுத்தம், கடிதப் பணி, கண்டன ஊர்வலம், கறுப்பு ஆடை அணிதல் போன்ற போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமது கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின், தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும்,  கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சன்ன திசாநாயக்க கூறியுள்ளார்.

இன்றைய தினம்(01), 12 இடங்களில் முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் ஆர்ப்பாட்டங்களில் சுமார் 40 தொழிற்சங்கங்கள் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...