புதிதாக தெரிவுசெய்யப்பட்ட காதிமார்களுக்கான செயலமர்வு!

Date:

புதிதாக நியமிக்கப்பட்ட காதி நீதிபதிகளுக்கான முழு நாள் பயிற்சி அமர்வொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை, (12) கண்டியில் டொபாஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

இப் பயிற்சி செயலமர்வை இலங்கை காதி நீதிபதிகள் சபை, ஸம் ஸம் பவுண்டேஷனுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது, சிறப்பாக திட்டமிடப்பட்ட விளக்கக் காட்சிகள், காதி அமைப்பு மற்றும் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தின் செயல்பாட்டைப் பற்றிய பயிற்சியுடன் கூடிய செயலமர்வாக இருந்தது.

இப் பயனுள்ள நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களாக இடம்பெற்ற இரு அமர்வுகளை, இலங்கை காதி நீதிபதிகள் மன்றத்தின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல். ஏ.எம். ஃபௌஸ், ஸம் ஸம் பவுண்டேஷன் தலைவர், அஷ்ஷெய்க் முப்தி யூசுப் ஹனீஃபா, பாடநெறிப் பணிப்பாளர், அஷ்ஷெய்க் அம்ஹர் ஹகம்தீன், மற்றும் காதி சபையின் துணைத் தலைவர் இஃபாம் யஹியா ஆகியோர் நடத்தினார்கள்.

இதுவரை நீதிச் சேவைகள் ஆணைக்குழு 65 பேரில் 55 காதிகளை நியமித்துள்ளது. இவர்களில் 52 காதிமார்கள் இவ்வைபவத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...