ரங்காவுக்கு விளக்கமறியல்!

Date:

கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா, கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் நேற்று (18) ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பதில் நீதவான் ரஞ்சித் சேபால தஹநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு வவுனியா – செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வருகின்றது.

இந்தநிலையில், குறித்த வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

`இலங்கை எக்ஸ்போ 2027: வர்த்தகக் குழுவை அனுப்ப பாலஸ்தீனம் விருப்பம்; இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை!

இலங்கைக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை...

சிறுவர் பராமரிப்பும் அவர்களின் உரிமைகளும்; ஓர் இஸ்லாமிய பார்வை- சிறுவர் தினத்தை முன்னிட்டு விசேட கட்டுரை.

இஸ்லாம் குழந்தைகளுக்குச் சிறப்பான கவனிப்பையும் முக்கியத்துவத்தையும் வழங்கியுள்ளது. அவர்கள் பிறந்த பிறகும்,...

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் – டில்வின் சில்வா சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இன்று (1) முற்பகல் மக்கள்...