இனப்பெருக்க நோக்கங்களுக்காகவே குரங்குகளை சீனாவுக்கு அனுப்ப ஏற்பாடு: விவசாய அமைச்சு

Date:

குரங்குகள் இனப்பெருக்க நோக்கத்திற்காக சீனாவிற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக விவசாய அமைச்சு இன்று தெரிவித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Animal Breeding Limited என்ற சீன நிறுவனம் 100,000  குரங்குகளை கோரியதாக அவர் கூறினார்.

கோரிக்கையை நிறைவேற்ற, அமைச்சகம் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை தெரிவிக்க ஒரு மையத்தை திறந்துதுள்ளதாகவும் குரங்குகளை ஏற்றுமதி செய்வது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள், சுற்றுலாத் துறையினர், மதத் தலைவர்கள், விஞ்ஞானிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஏற்றுக்கொள்ளக்கூடிய, நியாயமான மற்றும் சிறந்த யோசனைகளை சேகரிக்கும் அதே வேளையில்,  குரங்குகளை சீனாவுக்கு அனுப்பும்போது சிறந்த முடிவை எடுக்க அமைச்சகம் நம்புகிறது.

குரங்குகளால் பெருமளவிலான பயிர்கள் அழிக்கப்படும் பிரதேசங்களில் இருந்து குரங்குகளை அகற்றுவதற்கு அமைச்சு எதிர்பார்த்துள்ளது.

காடுகள் மற்றும் பாதுகாப்புப் பகுதிகளில் இருந்து குரங்குகளை அகற்றும் எண்ணம் எதுவும் இல்லை என அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...