துபாயில் நடந்த சர்வதேச குர்ஆன் போட்டியில் பங்களாதேஷைச் சேர்ந்த ஹபீஸ் தக்ரிம் வெற்றி!

Date:

துபாயில் இடம்பெற்ற சர்வதேச குர்ஆன் போட்டி 2023இல் சலேஹ் அஹ்மத் தக்ரிம் முதல் இடம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

துபாய் எக்ஸ்போ சிட்டியில் உள்ள அல் வாசல் பிளாசாவில் கடந்த 4 ஆம் திகதி நடைபெற்ற விழாவில் துபாய்  ஆட்சியாளர் ஷேக் முஹம்மது பின் ரஷீத் பின் முஹம்மது பின் ரஷீத் அல்-மக்தூமிடம் இருந்து  பங்களாதேஷைச் சேர்ந்த சலேஹ் அஹ்மத் தக்ரிம் சிறந்த விருதையும் கௌரவத்தையும் பெற்றுக்கொண்டார்.

மார்ச் 24 ஆம் திகதி தொடங்கிய இப்போட்டியில் எத்தியோப்பியாவின் அப்பாஸ் ஹாடி உமர் மற்றும் சவூதி அரேபியாவின் காலித் சுலைமான் சாலிஹ் அல் பர்கானி ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.

நான்காவது இடத்தை கெமரூனைச் சேர்ந்த நூருதீன் மற்றும் இந்தோனேசியாவின் ஃபத்வா ஹதிஸ் மௌலானா ஆகியோர் வென்றனர்.

கென்யாவின் அப்துல் அலிம் அப்துர் ரஹீம் முஹம்மது ஹாஜி ஆறாவது இடத்தைப் பெற்றனர். ஏழாவது இடத்தை சிரியாவின் முஹம்மது ஹாஜ் அசாத் மற்றும் ஏமனின் முஹம்மது அப்துஹு அஹ்மத் காசிம் பெற்றுக் கொண்டனர்.

போட்டியின் இறுதி நாளில், அமைப்பின் துணைத் தலைவர் சையது அப்துல்லா ஹரிப் வரவேற்றுப் பேசியதுடன் அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவர் ஷேக் டாக்டர் அஹ்மத் உமர் ஹாஷிம் அவர்கள் இஸ்லாமிய ஆளுமையாக கௌரவிக்கப்பட்டார்.

இதேவேளை, பங்களாதேஷ் நாகர்பூர்ஸ் பத்ரா கிராமத்தைச் சேர்ந்த மக்கள், 26வது சர்வதேச குர்ஆன் ஓதும் போட்டியில் அஹ்மத் தக்ரிமின் வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தக்ரிம் பத்ரா அல்லது நகர்பூர் மலைப்பகுதிக்கு மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் பெருமை சேர்த்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

தக்ரிம், மக்ராசு ஃபைசில் குர்ஆன் அல் இஸ்லாமி டாக்காவில் உள்ள கிதாப் பள்ளி மாணவர்.

இதுகுறித்து தக்ரிமின் உறவினர்கள்  கூறியதாவது:

குர்ஆன் போட்டியில் பங்கேற்பதற்காக தக்ரீம் மார்ச் 20ம் திகதி துபாய் சென்றார். இரண்டாம் ரமலான் முதல் போட்டி தொடங்கியது.

போட்டியின் முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது. தக்ரீம் முதலிடம் பிடித்தார். இந்த செய்தி எங்கள் கிராம மக்களை மிகவும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

முன்னதாக, தக்ரிம் சவூதி அரேபியா, ஈரான் மற்றும் லிபியாவில் பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்றார். ‘தக்ரிமின் இந்த வெற்றிக்காக நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இது எங்களுக்கு பெரிய கௌரவத்தை தந்துள்ளது என்றனர்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...