வரலாற்றில் முதற்தடவையாக புத்தளத்தில் மாபெரும் நோன்புப் பெருநாள் விழா!

Date:

புத்தளம் மாவட்டத்தில் வரலாற்றில் முதற்தடைவையாக மாபெரும் நோன்புபெருநாள் நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 23, 24, 25 ஆம் திகதிகளில் புத்தளம், கற்பிட்டி, முந்தல் பிரதேச சபைக்குட்பட்ட கடையாமுட்டை பகுதிகளிலும் இந்த விழா இடம்பெறும் என புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் அவர்களின் பிரத்தியேகச் செயலாளர் ஜௌசி அவர்கள் நியூஸ்நவ்’ இற்கு  தெரிவித்தார்.

அதற்மைய, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் தலைமையில் மாபெரும் நோன்புப் பெருநாள் விழாக்களை நடத்துவதற்கான திட்டமிடல் கூட்டம் புத்தளம் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

புத்தளம், கல்பிட்டி மதுரன்குளி நகரங்கள் அலங்கரிக்கப்பட்டு பாரம்பரிய மற்றும் நவீன விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதுடன்.

புத்தளம் பிரதேசத்தின் விளையாட்டு நிகழ்ச்சிகள் புத்தளத்திலும் கல்பிட்டி பிரதேசத்தின் விளையாட்டு நிகழ்ச்சிகள் நுரைச்சோலையிலும் மதுரன்குளி பிரதேசத்தின் விளையாட்டு நிகழ்ச்சிகள் கடையாமோட்டை பகுதியிலும் நடத்தப்படவுள்ளது.

இந்த மாபெரும் பெருநாள் நிகழ்வானது புத்தளம் மாவட்டத்தில் சகல மதத்தவர்களும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக வாழ்கின்றமையால் சமூக நல்லிணக்கத்தை அடிப்படையாக்கொண்டு சகோதர மதத்தவர்களின் பாரம்பரியங்களை அறிந்திருப்பதுடன் அதற்கு மதிப்பளிக்கும் வகையில் இடம்பெறவுள்ளது.

இற்றைக்கு சில வருடங்களுக்கு முன்னர் இஸ்லாமியர்களின் பெருநாளைத் தொடர்ந்து நடத்தப்படும் விழாக்களில் பௌத்த, கத்தோலிக்க மற்றும் இந்து சமயங்களைப் பின்பற்றும் மக்கள் இன மத பேதமின்றி பங்குபற்றி வந்தனர்.

அந்த வகையில் எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு மாபெரும் பெருநாள் விழா நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் பிரத்தியேகச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இந்த பெருநாள் விழா அரச நிறுவனங்கள், பொலிஸ் மற்றும் முப்படைகளின் பூரண அனுசரணையுடன் நடைபெறவுள்ளது.

பிரதே செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள், முப்படைகளின் பிரதானிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் மற்றும் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், புத்தளம் உப்பு நலன் புரிச்சங்க உறுப்பினர்களின் தலைமையில் இந்த விழா இடம்பெறவுள்ளது.

 

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...