வெளிநாட்டு தொழிலாளர்களால் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது!

Date:

உத்தியோகபூர்வ வழிகள் மூலம் தொழிலாளர்களால் அனுப்பட்ட பணம் கடந்த மாதம் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகரித்துள்ளது.

பெப்ரவரியில், இலங்கைக்கு வெளிநாட்டுப் பணியாளர்களிடமிருந்து 407.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டது, மார்ச் மாதத்தில் இந்தத் தொகை 568.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, மார்ச் 2022 இல் இலங்கைக்கு 318.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார்.

அதன்படி, மார்ச் 2022 உடன் ஒப்பிடுகையில், தொழிலாளர்கள் அனுப்பும் பணமானது கடந்த மாதம் 78.5 சதவீதம் அல்லது 249.9 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு 1,413.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...