பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான ஹக்கீமா தனது வைத்திய செலவுக்களுக்காக பொது மக்கள் உதவியை கோருகிறார்.
விவாகரத்து செய்யப்பட்ட இளம் விதவையான ஹக்கீமாவிற்கு இரண்டு வயதுடைய மகள் ஒருவரும் இருக்கின்றார்.
சுமைகளை சுமப்பதற்காக ஹக்கீமாவின் தந்தை மத்திய கிழக்கிற்கு பயணித்தார். என்றாலும் இதுவரை அவருக்கு எந்தவொரு வேலையும் கிடைக்காமையினால் அவர் மீண்டும் ஏமாற்றத்தோடு தாயகம் திரும்புவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.
ஹக்கீமாவின் வறிய குடும்பத்தை பற்றி மட்டுமல்லாது இங்கு இன்னும் ஒரு கசப்பான சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஹக்கீமாவின் வீடு ஒரு மலைப்பாங்கான பிரதேசத்தில் இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பத்தடி உயரத்திலிருந்து ஹக்கீமா கீழே பள்ளத்திற்கு விழுந்திருக்கிறாள். ஏற்கனவே வாழ்க்கையில் இடறி விழுந்திருக்கின்ற இவர்களது குடும்பத்துக்கு இது பேரிடியாக அமைந்திருந்தது.
உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஹக்கீமா மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு உடனடியாக மாற்றப்பட்டாள்.
முள்ளந்தண்டில் முறிவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கை வெளியாகி இருந்தது. அதனை சத்திர சிகிச்சை செய்து இணைப்பதற்கு ஆணிகள் போடப்பட வேண்டி இருப்பதாகவும் அதற்கு ஊரில் உள்ள நல்லுள்ளம் கொண்டோரின் பங்களிப்புடன் எட்டரை லட்சம் ரூபாய் சேகரிக்கப்பட்டு ஹக்கீமாவுக்கு சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
சத்திர சிகிச்சையின் பின்னர் ஒன்றரை மாதம் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஹக்கீமா தற்பொழுது வீடு திரும்பி இருக்கிறாள்.
என்றாலும் ஹக்கீமா இதுவரை கட்டிலில் படுத்த படுக்கையாக கிடக்கிறாள். அவளால் எழுந்து உட்காருவதற்கோ, நடப்பதற்கோ முடியாது. எல்லாமே கட்டிலில்தான்.
நாட்டில் தற்பொழுது இருக்கின்ற பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஹக்கீமாவிற்கு அவசியமான மருந்துகள் தனியார் பாமஸிகளிலேயே அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கிறது.
பெம்பஸ் வாங்க வேண்டி இருக்கிறது. மேலும் வாரம் ஒரு முறை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும், இரண்டு வாரத்திற்கு ஒருமுறை ராகம வைத்தியசாலைக்கும் ஹக்கீமாவை அழைத்துச் செல்ல வேண்டி இருக்கிறது.
படுத்த படுக்கையிலேயே இருக்கும் ஹக்கீமாவை வாடகை வேன் ஒன்றிலேயே அழைத்துச் செல்ல வேண்டியும் இருக்கிறது. ஏற்கனவே அடுத்த வேலை சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் இருக்கின்ற ஹக்கீமாவின் தாயார் ஹக்கீமாவின் மருத்துவ செலவுகளுக்கும், போக்குவரத்துக்கும் வழியின்றி பெரும் ஏக்கத்தோடு இருக்கின்றாள்.
இது போதாமைக்கு ஹக்கீமா விரைவில் குணமடைய போஷாக்கான உணவும், பழங்களும் வழங்க வேண்டியிருக்கிறது.
எனவே நல்லுள்ளம் படைத்த கொடை வள்ளல்களிடமிருந்து இதற்காக நிதியுதவியினை அவளது ஏழைத்தாய் எதிர்பார்க்கின்றார்.
வறுமையில் வாழ்ந்தாலும் இதுவரையும் யாரிடமும் கை நீட்டாத ஹக்கீமாவின் குடும்பம் இப்பொழுது சமூகத்தின் முன் ஹக்கீமாவை குணப்படுத்துவதற்காக கைநீட்டி இருக்கிறது.
மேலான ரமலான் மாதத்தில் உங்களது உயர்ந்த ஸதக்காக்களில் ஹக்கீமாவையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
உங்களால் முடிந்த சிறிய தொகையாக இருந்தாலும் அதனை வழங்கி ஹக்கீமாவின் மருத்துவ செலவில் நீங்களும் பங்காளியாகுங்கள்.
ஹக்கீமாவின் சகோதரியின் கணக்கு விபரங்கள் கீழே.
Beruwala.
Beruwala
ஹக்கீமா தொடர்பான மேலதிக தகவல்களை பெற விரும்புபவர்கள் தாராளமாக பின்வரும் தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.
ரூமி ஹாரிஸ்,
0716666699, 0767810699