அக்குரணை பள்ளிவாசல் மீதான குண்டுத் தாக்குதல் தகவல் தொடர்பில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம்: அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

Date:

கண்டி ASP மற்றும் அலவத்துகொட OIC ஆகியோர், அக்குறணை அஸ்னா மஸ்ஜித் நிர்வாகிகளைச் சந்தித்து அக்குறணையில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக கூறியது தொடர்பில் ஜம்இய்யா கவனம் செலுத்தி வருகின்றது என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்துள்ளது.

உலமா சபை இன்று (20) விடுத்துள்ள அறிக்கையில், இது தொடர்பில் பாதுகாப்பு அதிகாரிகள் உரிய விசாரணைகளை நடாத்தி தகவலின் நம்பகத் தன்மையையும் அதன் விபரங்களையும் வெளிக் கொண்டு வரவேண்டுமெனவும் சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வைச் சீர்குலைக்கும் தீய சக்திகளை அடையாளங்கண்டு அவற்றைத் தடுத்து நிறுத்தி தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், முஸ்லிம்களின் பாதுகாப்புத் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்துமாறும் வேண்டி பொலிஸ் மாஅதிபர் சந்தன டி விக்கிரமரத்ன அவர்களுக்கு, ஜம்இய்யா கடிதமொன்றை நேற்று 19 ஆம் திகதி அனுப்பிவைத்துள்ளது எனவும் குறிப்பட்டுள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதில் தலைவர் அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிழா மற்றும் பதில் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம் இணைந்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் இந்தத் தகவல் தொடர்பில் மிக அவதானமாக நடந்துகொள்ளுமாறு இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் ஜம்இய்யா வேண்டிக் கொள்கிறது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...