கண்டி, அக்குரணையில் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த பிரதேசம் முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அலவத்துகொட பொலிஸ் அத்தியட்சகரிடம் (OIC) ‘நியூஸ் நவ்’ தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலதிக பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினரும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க அப்பகுதியில் இராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பள்ளிவாசலுக்கு மட்டுமல்லாமல் முழு பிரதேசத்திற்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை பள்ளிவாசல் அருகில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், வாகனங்கள் பரிசோதனைக்குட்படுத்துவதாகவும் அக்குறணை பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.