அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கையிருப்பில் உள்ளன: அதிக விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை

Date:

எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

பொருட்களின் கையிருப்பு தொடர்பில் இறக்குமதியாளர்களுடன் தொடர்ச்சியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வர்த்தக அமைச்சின் செயலாளர்  அத்தபத்து தெரிவித்தார்.

பொருட்களை மறைத்து வைத்தல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட நுகர்வோரை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் செயற்பாடுகளைக் குறைப்பதற்காக நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் அளக்கும் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் குழு, நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்கு தேவையான உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொடுக்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, திரவ முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதற்கான உரிய வரி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வரண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...