எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் செயற்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்தார்.