உலக வரலாற்றில் மிக பெரிய சரித்திரத்தை படைத்த இயேசுவின் மரணம் மற்றும் அவருடைய உயிர்த்தெழுதலும் பற்றிய பின்னணிதான் புனித வெள்ளி (சிலுவையில் உயிர் தியாகம் செய்த நாள்) மற்றும் ஈஸ்டர் (மூன்றாம் நாள்) அவர் உயிர்த்தெழுந்த நாளை, உலகெங்கும் உள்ள கிறிஸ்துவர்கள் கொண்டாடுகின்றனர்.
இயேசுவினுடைய சிலுவை மரணம் என்பது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல, மனுஷரில் முதற் உயிர்த்தெழுதலின் பலனாக அவர் மரணத்தை ஜெயித்து, தாம் சொன்னபடியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து இன்றும் திறக்கப்பட ஒரே கல்லறையாக விளங்குகின்றது.
இது உலகத்தை திரும்பி பார்க்கவைத்த மிக பெரிய சரித்திர நிகழ்வாகும்.
வேதபுத்தகத்தில் யோவான் 19:17,18, அவர் (இயேசு) தம்முடைய சிலுவையை சுமந்துகொண்டு, எபிரேயு (Hebrew’s Language) பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்கு, அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்.
இயேசு ஏன் சிலுவையில் கொடூரமாக கொல்லப்படவேண்டும், என்ற கேள்வி அநேகருக்கு தங்கள் உள்ளத்தில் எழும்பலாம். ஒவ்வொரு நாட்டிலும் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படுகிற தண்டனை வித்தியாசப்படும்.
குற்றவாளிகளை சிறைச்சாலையில் வைப்பதும், சிலுவையில் தொங்கவிடப்படுவதும், ஆணி அடிப்பதும் என பல விதங்களில் தண்டனைகள் வழங்கப்படுவதுண்டு.
இயேசு வாழந்த காலத்தில் ரோமா பேரரசு (Italy) பல தேசங்களை தங்கள் வசப்படுத்தி, ஆட்சி செய்து வந்தது. இயேசுவின் நாட்களில் இஸ்ரவேல் தேசமும், ரோமா ஆட்சியின் கீழ் இருந்தது.
அந்த அரசாங்கம், மக்கள் தவறு செய்தவர்களையும், அரசாங்கத்திற்கு விரோதமாக குற்றம் செய்பவர்களையும், மிக கொடூரமான முறையில் தண்டை கொடுத்துவந்தது.
இதனால் மக்களுக்கு பயம் உண்டாகும்பொருட்டு தண்டை வழங்கி வந்தது. அதில் ஒன்று தான் இந்த சிலுவை மரண தண்டனை. ஒருவர் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டால், சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்துவிடுவார்கள்.
அவனுக்கென்று மரச் சிலுவை செய்யப்பட்டு, அதை குற்றவாளிமேல் சுமத்தி, எல்லா ஜனங்கள் பார்க்கும்படியாக சிலுவையை சுமந்துகொண்டு சென்று, எல்லாரும் பார்க்கும் இடத்தில் அவரை சிலுவையில் ஆணிகளால் அறைந்து, கொலை செய்வார்கள், மட்டும்மின்றி அவர் செய்த குற்றத்தையும் ஒரு பலகையின்மேல் எழுதி வைப்பார்கள். இப்படிப்பட்ட கொடூரமான மரணத்தை தான் இயேசு சந்தித்தார்.
பிலாத்து ரோமா ஆட்சியின் கவர்னர் (Governor) மட்டுமே மரண தண்டை வழங்கக்கூடிய அதிகாரம் இருந்தது.
அவருக்கு முன்பாக இயேசுவை நிறுத்தி, பொய்யான குற்றம்சாட்டி, பல குற்றங்கள் செய்தவராக முன்னிறுத்தினார்கள்.
ஆனால் கவர்னர் பிலாத்து, அவரை விசாரணை செய்தபின், இவரிடத்தில் (இயேசு) நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றும் இவரை வெளியே கொண்டுவருகிறேன் என்று கூறினார்.
இதை யோவான் 19:4 என்ற புத்தகத்தில் பார்க்கலாம். இயேசுவோடே கூட இருந்த, அவருடைய சீஷர்களில் ஒருவரான யூதாஸ் 30 வெள்ளி காசுக்காக துரோகியாக மாறி, மத தலைவர்களிடம் இயேசுவை காட்டிக்கொடுத்தான். அவரை காட்டிக்கொடுத்த பிறகு, இயேசு குற்றமற்றவர் என்று உணர்ந்தான்.
இயேசு குற்றமற்றவர் என்று நிரூபித்தபோதிலும் ஏன் அவரை சிலுவையில் அறையப்படுவதற்கும், மரணத்திற்கும் ஒப்புக்கொடுத்தார்கள்? முக்கிய காரணம், மனித குல பாவம், பரிசுத்த தெய்வத்தை சிலுவைக்கு கொண்டு சென்றது.
சர்வலோகத்தின் பாவம் அவர் தலையின் மேல் வந்தது. ஏசாயா: 53:5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களின் நிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்கு சமாதானத்தை உண்டுபண்னும் ஆக்கினை அவர்மேல் வந்தது.
பரிசுத்த வேதாகமத்தில், அவர் பாவத்தை பாரத சுத்த கண்ணர், பாவம் அறியாதவர், பாவம் அவருக்குள் இல்லை என்று சொல்லப்படுகிறது. அதாவது நம்முடைய பாவம் என்றால் மாம்சத்தில் செய்கிற பாவம், மோகம், இச்சை, சிந்தையில், கண்களில், வாயினால் பொய் சொல்லுவது, போன்ற பாவங்களின் நிமித்தம் நாம் பெற வேண்டிய தண்டனையை, அவருடைய மாம்சத்தில் நம்முடைய பாவங்களை ஏற்றுக்கொண்டு, ஆக்கினியடைந்து, நமக்கு சமாதானம் உண்டு பண்ணினார்.
பாவத்திற்கு அவரை பலியாக ஒப்புக்கொடுத்து, நமக்காக பாவ நிவாரண பலியானார். இதை விசுவாசிப்பதினால் இரட்சிப்பு உண்டாகும் என்று கூறப்படுகிறது.
கொல்கொதா மலையில், இயேசு கிறிஸ்து சிலுவையில் பட்ட பாடுகளையும், சிலுவையில் அறையப்பட்டு உயிர் ஈந்த நாளை புனித வெள்ளி நாளாக அனுசரிக்கப்படுகிறது.
மேலும் மூன்றாம் நாள் அவர் உயிரோடு எழுந்த நாளை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடப்படுகின்றது.
இதனையொட்டி எல்லா கிறிஸ்துவ தேவாலயங்களில் புனித வெள்ளி அன்று சிறப்பு வழிபாடும், மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் திருநாள் வெகு விமர்சையாக கொண்டாப்பட்டுவருகிறது.
எத்தனையோ வெள்ளிக்கிழமைகள் இருக்க இந்நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடிமைத்தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாபமாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்வாதத்தை உண்டாக்கி, மனிதனை சிந்தனை செய்ய வைத்த நாள்.
இது துக்கத்தின் நாளும் அல்ல, சந்தோஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்பணிப்பின், தீர்மானத்தின் நாள். இயேசுவின் மரணத்தில் நம்மை பங்குள்ளவர்களாக்கும் நாள்.
நம்முடைய பாவ, சாப, தரித்திர, மரண வல்லமையை முறியடித்த நாள். நாம் நம் இயேசுவின் மரணத்தை ஏற்று அதில் நாம் பங்குடையவர்களாகிறோம் என்பதுதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்மானங்களில் மிகவும் பெறுமதியான, விலைமதிக்க முடியாத தீர்மானம்.
நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும்.
ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும்.
நன்றி : இணையம்