ஊழலுக்கு எதிரான சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.
சொத்துகளுடன் தொடர்புடைய இலஞ்சம், ஊழல் மோசடி குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை கண்டறியவும் விசாரணை செய்யவும் வழக்கு தொடரவும் சுயாதீன ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான சந்தர்ப்பம் இதனூடாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஊழல் மோசடிகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை விஸ்தரிப்பதும் மக்களுக்கான தௌிவூட்டலை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
மேலும், இந்த வரைவின் மூலம், புகார் இல்லாவிட்டாலும், விசாரணை நடத்த, சம்பந்தப்பட்ட கமிஷனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு எந்தவொரு தகவல், முறைப்பாடு, அல்லது ஆணைக்குழுவின் சொந்த தேவையின் அடிப்படையிலோ அல்லது ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற வேறு ஏதேனும் முக்கிய விடயத்தின் அடிப்படையிலோ தனது விசாரணைகளை ஆரம்பிக்க முடியும்.