கட்சித் தலைவர்கள் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் நாளை நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் முற்பகல் 11 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற அலுவல் குழு உறுப்பினர்கள் தீர்மானிக்கவுள்ளனர்.
தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இம்மாதம் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.