இலங்கை திறன்கள் எக்ஸ்போ கண்காட்சி 2023 கல்வி அமைச்சு மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள பல நிறுவனங்கள் இணைந்து அனைத்து வயதுடைய இலங்கையர்களின் தொழில் மேம்பாட்டிற்கான பரந்த எல்லைகளைக் கண்டறியவும் மற்றும் தொழில் தேடுபவர்களின் கனவுகளை நனவாக்கும் நோக்கில் நடத்தப்படுகிறது.
இக்கண்காட்சியானது கொழும்பு BMICH இல் மே 12 முதல் 14 வரை இடம்பெறவுள்ளது. திறன்கள் எக்ஸ்போ 2023 மூன்று நாட்களில் 15,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை எதிர்பார்க்கிறது.
இலங்கை திறன்கள் எக்ஸ்போ கண்காட்சி 2023, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஐந்து முக்கிய துறைகளில் புதிய மற்றும் வளர்ந்து வரும் நுட்பங்களைக் காட்சிப்படுத்துவதையும், தொழில் தேடுபவர்களுக்கு தொழில் தேடுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதையும் இலக்காகக் கொண்ட ஒரு அற்புதமான நிகழ்வாக இடம்பெறவுள்ளது.
இக்கண்காட்ச்சியின் உத்தியோகபூர்வ நிகழ்வானது மே 12 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
Sri Lanka Skills Expo 2023 தினமும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்களுக்காக திறந்திருக்கும். நுழைவு கட்டணம் இலவசம்.