துருக்கியில் ஏற்பட்ட இயற்கை பேரிடரில் இருந்து உயிர் பிழைத்தவர்கள் புனித ரமழான் மாதத்தில் நம்பிக்கை, குடும்பம் மற்றும் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறார்கள்.
ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் தங்கள் உறவை வலுப்படுத்தவும், கருணை மற்றும் பொறுமையைக் காட்டவும் தொண்டு செய்யவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
துருக்கியின் தென்கிழக்கு மாகாணங்களில் இந்த ஆண்டு பெப்ரவரியில் பாரிய நிலநடுக்கங்களால் 55,000 க்கும் அதிகமான மக்கள் பலியானதுடன் மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர்.
பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். அத்தோடு அவர்கள் பாதுகாப்பாகவும் இல்லை.
ஒரே நேரத்தில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நிலை – பணவீக்கம் அதிகரித்து உணவுப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு புனித மாதத்தை குறிப்பாக கடினமாக்கியுள்ளது.
இந்த பேரழிவிலிருந்து துருக்கி மீண்டு வருவதால் இந்த ரமழான் மாதம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
துருக்கியில் ஏற்பட்ட 7.7 மற்றும் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்களல் அண்டை நாடான சிரியாவையும் உலுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.