எரிவாயு பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்த சந்ததியினருக்கு உணர்த்தும் நோக்கில் ‘எமது பிள்ளைகளை நாளை காப்போம்’ எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
எரிவாயு தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற சில சம்பவங்களை அவதானித்து இந்த செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் கல்வி அமைச்சின் அங்கீகாரத்துடன் உயர்தர மாணவர்களுக்காக வினாடி-வினா, விவாதம் மற்றும் பேச்சுப் போட்டித் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எரிவாயுவைப் பயன்படுத்தத் தொடங்கும் அடுத்த தலைமுறை உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு எரிவாயுவின் பாதுகாப்பான பயன்பாடு, சிக்கனமான பயன்பாடு மற்றும் எரிவாயுவில் உள்ள கூறுகள் குறித்துக் கற்பிக்க 500 க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் முதற்கட்ட போட்டிகள் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.