மலேசிய நாட்டிலுள்ள லீகா முஸ்லிம் பினாங்கு அமைப்பு சார்பில் 69வது வருடாந்த இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
மலேசிய நாட்டின் புராதான தீவு நகரமான பினாங்கில் இந்தியர் பள்ளிவாசல் மஸ்ஜித் கப்பித்தான் கிலிங் உள்ளது. தற்போது 222-ஆம் ஆண்டில் பழமை ஒளிர காட்சியளிக்கும் இது தமிழக மக்களின் ஒன்றுகூடல் மையமாக திகழ்கிறது.
பினாங்கு மாநில கவர்னர் துன் டத்தோ ஸ்ரீ உத்தமா அகமட் பூஜி அவர்களும், முதல்வர் மாண்புமிகு Y.A.B. Tuan Chow Kow Yeow அவர்களும் இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிகழ்வுக்கு லீகா முஸ்லிம் சார்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அழைக்கப்பட்டிருந்தார்.
இந்நிகழ்வில் இந்திய சமூகத்தின் ஆளுமைகள், வணிகர்கள், தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், NGO அமைப்புகளின் தலைவர்கள் என பலரும் வருகை தந்திருந்தனர்.
நிகழ்வில் கவர்னர் மற்றும் முதல்வரிடம் மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை லீகா முஸ்லிம் அமைப்பின் நிர்வாகிகள் அறிமுகப்படுத்தினர்.
மேலும், அவர்களுக்கு பொதுச்செயலாளர் அவர்கள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். இஃப்தாருக்கு பின்பு முக்கிய பிரமுகர்கள் அனைவரும் பொதுச்செயலாளருடன் கலந்துரையாடியதுடன் மஜக-வின் பணிகள் இன்றைய அரசியல் யதார்த்தங்களுக்கு பொருந்தி போவதாக பாராட்டி வாழ்த்துக்கைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் லீகா முஸ்லிம் தலைவர் டத்தோ ஹாஜா நஜ்முதீன் காதர் , செயலாளர் எஸ்.பி.கே முகம்மது நூர், துணைத்தலைவர் டத்தோ சாகுல்ஹமீது, கப்பித்தான் பள்ளி நிர்வாகத்தலைவர் டத்தோ ஹாஜி பாருக், சுபைதா குழுமங்களின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் அஜிஸ், மஜக துணைப் பொதுச்செயலாளர் ராவுத்தர்ஷா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.