ரைஸ் குக்கரின் மூடியால் தந்தையொருவர் தனது 16 வயது மகளின் முகத்தில் சூடு வைத்த சம்பவமொன்று பின்வத்த, வடுபசல் வத்த பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.
பின்வத்த, வடுபசல் வத்த பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமி தீக்காயங்களுடன் நேற்று (05) இரவு தனது தாயுடன் சென்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்பின்னர் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு 7.45 மணியளவில் சிறுமி சோறு சமைத்துக் கொண்டிருந்தபோது, வீட்டிற்கு வந்த தந்தை ரைஸ் குக்கரின் மூடியை திறந்து பார்த்து ஏன் இவ்வளவு சோறு சமைக்கிறீர்கள் என்று கேட்டு கொதித்துக் கொண்டிருந்த ரைஸ் குக்கரின் மூடியால் மகளின் முகத்தில் சூடு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முகம் மற்றும் கன்னங்களில் தீக்காயங்களுடன் சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சந்தேக நபரான தந்தையை கைது செய்ய பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.