அலாஸ்காவின் கான்ட்வெல்லில் இன்று அதிகாலையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மேலும் தெரிவிக்கையில், குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 49.3 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உடனடி சேதங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதே வேலை, அந்தமானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3.9 ஆக பதிவாகியுள்ளது. அந்தமானின் திக்லிப்பூர் அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரே நாளில் சுமார் 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று காலை மீண்டும் அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.