நாட்டுக்கான மின்சார தேவை சடுதியாக அதிகரிப்பு!

Date:

நாட்டுக்கான மின்சார தேவை சடுதியாக அதிகரித்துள்ளதாக மின் சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக நாட்டின் மின்சார தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் நேற்று முன்தினம் ஒரு நாளுக்கான அதி கூடிய மின்சார தேவை பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தேவைக்கு ஏற்ப நேற்று முன்தினம் நிகர மின் உற்பத்தி மணிக்கு 49.53 ஜிகா வோட்டாக பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன் நேற்றைய மின் தேவை 50 ஜிகா வோட்டையும் தாண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் மின்சார தேவை அதிகரிப்பை கவனத்திற் கொண்டு ஹம்பாந்தோட்டையில் அண்மையில் நிறுவப்பட்ட டீசலில் இயங்கும் மின் உற்பத்தி நிலையம் உட்பட மின்சார சபைக்கு சொந்தமான அனைத்து அனல் மின் நிலையங்களும் மின் உற்பத்திக்காக உபயோகப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...