இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதம்… பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் கண்டிப்பு!

Date:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதம் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

அதேநேரம்  அவரை விடுதலை செய்யவும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட சுமார் 120 வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ளன.

இதில் 2 வழக்குகளில் பிணையை நீட்டிக்கக் கோரி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் இம்ரான் கான் ஆஜரான போது, இராணுவத்தினர் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

இதனை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், இம்ரான் கான் தரப்பில் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், என்.ஏ.பி எனப்படும் தேசிய பொறுப்புடமை அமைப்பு (National Accountability Bureau )) நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டியது.

நாட்டில் உள்ள அனைவருக்கும் நீதிமன்றத்தை அணுகும் உரிமை உள்ளதாக கூறிய உச்சநீதிமன்றம், முன் அனுமதியின்றி இம்ரான் கானை கைது செய்யததாக சாடியது. மேலும் நீதிமன்ற ஊழியர்களும் சட்டவிரோதமாக செயல்பட அனுமதித்ததாக உச்சநீதிமன்றம் குற்றம்சாட்டியது.

இம்ரான் கானை ஒரு மணிநேரத்திற்குள் உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து, இம்ரான்கான் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...