இலங்கையில் 14 ஆண்டுகளின் பின்னர் மலேரியாவால் ஒருவர் உயிரிழப்பு!

Date:

இலங்கையில், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 15 பேருக்கு மலேரியா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மலேரியா தொற்று பரம்பல் உள்ள நாடுகளுக்கு சென்று திரும்பியவர்களுக்கு இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளது.

14 ஆண்டுகளின் பின்னர், இந்த ஆண்டு, பேருவளை பகுதியைச் சேர்ந்த ஒருவர், மலேரியா தொற்றினால் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆபிரிக்க நாட்டுக்கு சென்று திரும்பியிருந்த நிலையில், அவருக்கு மலேரியா தொற்று உறுதியாகியுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு, கடந்த 30 ஆம் திகதி மலேரியா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மலேரியா பரம்பல் குறித்து யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு விளக்கமளித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...