மதங்களை அவமதித்ததாகக் கூறப்படும் நடாஷா எதிரிசூரிய கைது!

Date:

பௌத்த மதத்தை அவமரியாதை செய்யும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய, நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட வேளையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA)  நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் கொழும்பு பிஷப் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடாஷா எதிரிசூரிய தெரிவித்த கருத்து ஒன்றின் பின்னணியிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நடாஷா எதிரிசூரிய பௌத்த மதத்தை அவமதித்துள்ளதாக தெரிவித்து வணக்கத்துக்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் நேற்று (27) பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

எவ்வாறாயினும், பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக விமர்சிக்கப்பட்ட நடாஷா எதிரிசூரிய, பகிரங்க மன்னிப்பு கோரியதோடு, அது தொடர்பில் வெளியிடப்பட்ட காணொளிகளையும் நீக்கியுள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...