இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் மோடி: திறப்பு விழாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்!

Date:

இந்திய நாடாளுமன்றத்திற்கு புதிதாக கட்டப்பட்ட 64, 500 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட புதிய கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.

நாடாளுமன்றத் திறப்பு விழா இன்று  நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. முதலில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி சபாநாயகர் ஒம் பிர்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவும் நிகழ்வு நடைபெற்றது. விழா மண்டபத்திற்குக் கொண்டு வரப்பட்ட செங்கோலுக்கு முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டன.

திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு சைவ மடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் ஓத தேவாரம் பாட செங்கோலுக்கு பூஜை செய்யப்பட்டது.

மேலும் அனைத்து ஆதீனங்களும் செங்கோலுக்கு புனித நீர் தெளித்து மலர் தூவி மரியாதை செய்தனர். அப்போது புனித செங்கோல் முன்பாக பிரதமர் நரேந்திர மோடி விழுந்து வணங்கினார்.

இதையடுத்து வேத மந்திரங்கள் ஓத தேவாரம் பாட மங்கள இசை இசைக்க தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனம் தருமபுரம் ஆதீனம் குன்றக்குடி ஆதீனம் மதுரை ஆதீனம் பேரூர் ஆதீனம் வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள் புனித செங்கோலை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார்கள்.

புனித செங்கோலை கைகளில் ஏந்தியவாறு நாடாளுமன்ற மக்களவைக்குள் சென்ற பிரதமர் மோடி அங்கு சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் செங்கோலை நிறுவினார். அப்போது சபாநாயகர் ஓம் பிர்லாவும் உடன் இருந்தார்.

இதையடுத்து புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இவ்விழாவில் மத்திய அமைச்சர்கள் மாநில முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இதையடுத்து நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு அளித்து பிரதமர் மோடி கௌரவித்தார். இதன் தொடர்ச்சியாக சர்வமத பிரார்த்தினை நடைபெற்றது.

புதிய நாடாளுமன்றத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அப்போது அவையில் இருந்தவர்கள் மோடி மோடி என உற்சாக குரல் எழுப்பினர்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அதிகாரமளிக்கும் தொட்டிலாக திகழும் என பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு : முன்னதாக, இந்தியாவின் முதல் குடிமகளான குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தான் புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், மத்திய அரசு பிரதமர் மோடி தான் திறந்து வைப்பார் என உறுதியாக இருந்ததால், எதிர்க்கட்சிகள் இந்த விழாவை புறக்கணித்தன.

இந்நிலையில், புதிய நாடாளுமன்றத்தின் கட்டிட வடிவமைப்பை சவப்பெட்டியுடன் ஒப்பிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி வெளியிட்ட ட்விட்டர் பதிவு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் புறக்கணித்துள்ளன.

Popular

More like this
Related

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...