அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, டொலரின் கொள்முதல் விலை 299.19 ரூபாவில் இருந்து 297.98 ரூபாவாகவும், விற்பனை விலை 312.33 ரூபாவில் இருந்து 311.23 ரூபாவாக குறைந்துள்ளது.
இதனிடையே, மேலும் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பும் கணிசமாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.