ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வாக்கர் டர்க்கைச் சந்தித்தார்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள அனைத்து காரணங்கள் குறித்தும் சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டதாக மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்