அல்ஆலிமா டொக்டர் மரீனா தாஹா ரிபாயின் ”ரமழானில் கதை சொல்லும் நேரம்” நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கேள்வி பதில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் 2 ஆம் திகதி மாலை 4:00 மணிக்கு நடைபெறவுள்ளது.
ரமழானை பிரயோசனமுள்ளதாகக் கழிக்கும் வகையில் அல்குர்ஆன் கூறும் கதைகளை சிறுவர்களும் பெரியவர்களும் விரும்பிக் கேட்கும் விதமாக டொக்டர் மரீனா தாஹா ரிபாய் ரமழானின் ஒவ்வொரு நாளும் நடத்தியிருந்தார்.
ஒவ்வொரு நாள் கதை முடிவிலும் பார்வையாளர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்தனர்.
டொக்டர் மரீனாவுடைய பெண்கள் குழுவினர் இந்த ஏற்பாட்டினைச் செய்திருந்தனர்.
மெய்நிகழ் வழியாக நடைபெறவுள்ள இந்தப் பரிசளிப்பு வைபவத்தில் நிவ்ஸ் நவ் இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் நிறைவேற்று அதிகாரியும் ஊடகவியலாருமான அஷ்.அப்துல் முஜீப் பிரதம அதிதியாக கலந்து கொள்வார்.
டொக்டர் மரீனாவுடைய ”ரமழானில் கதை சொல்லும் நேரம்” நிகழ்ச்சி முஸ்லிம் சமூகத்தின் முன்னணி ஊடகமான நிவ்ஸ் நவ்விலும் ” ஸ்டோரி டைம் வித் ஆன்டி மரீனா” என்ற பெயரில் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகியது.
Join Zoom Meeting:-
https://us02web.zoom.us/j/87625307535?pwd=TkxsRk5BVHVUK3lTUUFoUzNaYTlEUT09
Meeting ID: 876 2530 7535
Passcode: 052509
On News Now- Facebook Link:-
https://web.facebook.com/tamil.newsnow.lk
Youtube Link:-