உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் எதிர்வரும் 31ஆம் திகதி வரையில், பொது மக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் தங்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளை முன்வைக்க முடியும் என நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, குறித்த தரப்பினர் தங்களது யோசனைகளை, justicemedia07@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும் என நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த யோசனைகள் மற்றும் கருத்துக்களை ஆராய்ந்து, புதிய சட்டமூலம் உருவாக்கப்படும் எனவும், அது தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடப்படும் எனவும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.