சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் (01) பிரதான கட்சிகள், அரசியல்சார் தொழிற்சங்கங்கள் கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரியளவில் பேரணிகளையும் கூட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளன.
அந்த வகையில், சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொதுச் சேவைகள் தொழிலாளர் சங்கத்தின் மே தின பேரணி தற்போது ஆரம்பமாகி கொழும்பு புறக்கோட்டை பிரதான ரயில் நிலையத்தை நோக்கி செல்கின்றது.