துருக்கி ஜனாதிபதித் தேர்தல்: 2 ஆம் சுற்று வாக்கெடுப்புக்கு சாத்தியம்?

Date:

துருக்கியின் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி தையீப் அர்துகான் முதலிடம் பெற்றுள்ளார்.

எனினும், எந்த வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளைப் பெறாதால் 2 ஆவது சுற்று வாக்கெடுப்பு நடத்தப்படும் நிலை எதிர்நோக்கப்படுகிறது.

துருக்கியின் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நேற்று நடைபெற்றது. ஜனாதிபதித் தேர்தலில் ஏறத்தாழ அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டுள்ள நிலையில்,

ஜனாதிபதித் தேர்தலில் ஏ.கே.பி எட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி அர்துகான்  49.42 சதவீத வாக்குகளைப் பெற்றள்ளார்.

சிஎச்பி கட்சியைச் சேர்ந்த கெமால் கிளிச்தரோலு 44.95 சதவீத வாக்குகளைப் பெற்றள்ளார். ஓடிஏ கூட்டணி வேட்பாளர் ஒகான் 5.2 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

முதல் சுற்றில் எவரும் 50 சதவீத வாக்குகளைப் பெறாவிட்டால் 2 ஆவது சுற்று வாக்கெடுப்பு மே 28 ஆம்  திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் சூழலில் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் கெமலுக்கு சாதகமாகவே வந்துள்ளன.

மேலும் துருக்கியில் 50 இலட்சம் புதிய வாக்காளர்கள் இருப்பதால் அவர்கள் அனைவரும் கெமலுக்கே வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் வேட்பாளர்கள் இருவரில் ஒருவர் 50% வாக்குகள் பெறவில்லையெனில், மே 28 அன்று துருக்கியில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும்.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...