பௌத்த மதத்தை அவமரியாதை செய்யும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய, நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட வேளையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் கொழும்பு பிஷப் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடாஷா எதிரிசூரிய தெரிவித்த கருத்து ஒன்றின் பின்னணியிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நடாஷா எதிரிசூரிய பௌத்த மதத்தை அவமதித்துள்ளதாக தெரிவித்து வணக்கத்துக்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் நேற்று (27) பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
எவ்வாறாயினும், பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக விமர்சிக்கப்பட்ட நடாஷா எதிரிசூரிய, பகிரங்க மன்னிப்பு கோரியதோடு, அது தொடர்பில் வெளியிடப்பட்ட காணொளிகளையும் நீக்கியுள்ளார்.