நலத்திட்ட உதவிகள் பற்றிய தகவலுக்கான அவசர தொலைபேசி இலக்கம்: அமைச்சர் அறிவிப்பு!

Date:

சமூக நலன்கள் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சமூக நலன்கள் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் தனிப்பட்ட முறையில் வழங்குவதற்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், நிகழ்நிலை(online) முறையின் மூலம் அந்த மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க முடியாத நபர்களுக்கு அதற்கேற்ப வசதிகள் செய்து தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 1924 என்ற அவசர இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...