மிக விமர்சையாக இடம்பெற்ற சிரேஷ்ட அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் எழுதிய ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ நூல் அறிமுக விழா

Date:

உலகத் தமிழ் அறிவிப்பாளர் பி.எச்.  அப்துல் ஹமீத் எழுதிய ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ நூலின் அறிமுக விழா கொழும்பு – 7இல் அமைந்துள்ள அழகியற் கற்கை அரங்கில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெற்றது.

அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் நிகழ்ந்த FETNA விழாவில் வெளியிடப்பட்ட இந்நூல், அடுத்து கனடா, இங்கிலாந்து, இந்தியா (தமிழ்நாடு) ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து, தற்போது இலங்கையில் இதன் அறிமுக விழா வெண்பா நூல்மனையின்  ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

சிரேஷ்ட அறிவிப்பாளர் விமல் சொக்கநாதனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட வானொலி அறிவிப்பாளரும் முன்னாள் பிரதிப் பரீட்சை ஆணையாளருமான  ஜி. போல் அந்தனி வாழ்த்துரை ஆற்றினார்.

அத்துடன், எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் (வீரகேசரி) நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன் இந்நூலை வெளியிட்டார்.

‍தொடர்ந்து, பேராதனை பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரனின் சிறப்புரை இடம்பெற்றது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாநிதி எம்.சி. ரஸ்மின் மற்றும் பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் ஆகியோர் நூல் நயவுரையினை வழங்கினார்கள்.

மேலும், இந்த நூல் அறிமுக நிகழ்வினை ‘தகவம்’ செயலாளரும் இலக்கியச் செயற்பாட்டாளருமான வசந்தி தயாபரன் தொகுத்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வானொலியில் மிக இளவயதிலேயே அறிவிப்பாளராகி, வானொலியின் பல்வேறு துறைகளிலும் அளப்பரிய பங்களிப்புகளை நல்கி, ஒலிபரப்புத் துறையில் மட்டுமன்றி, தொலைக்காட்சித்துறை, திரைப்படத்துறை எனப் பல்வேறு தளங்களிலும் 54 ஆண்டுகளுக்குமேல் அழுத்தமான தடம் பதித்த அன்பு அறிவிப்பாளர் பி. எச். அப்துல் ஹமீத் தனது அரை நூற்றாண்டு கடந்த வாழ்க்கை அனுபவங்களை ஒரு நூலாக எழுதியுள்ளார்.

இலங்கை வானொலிக் கலைக்கூடத்திலிருந்து எத்தனை – எத்தனை கலைஞர்கள் உருவாகியிருக்கிறார்கள்… எத்தனை இலக்கிய ஆளுமைகள் தங்கள் படைப்புகளை வானொலி ஒலிபரப்பினூடாக வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள்… எத்தனை பெரிய ஆளுமைகள் இந்த நிலையம் வழியாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்…” இவற்றையெல்லாம் பதிவுசெய்திடல் எமது இனத்திற்கும் மொழிக்கும் ஆற்றும் பெரும்பணியாகும்.

அந்த வகையில், உலகெங்கும் வாழும்; தமிழ் மக்கள் – வானொலி நேயர்கள் இதயங்களில், அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக இனிய தமிழ்க் குரலால், படைப்பாற்றல் திறனால் இடம்பிடித்திருக்கும் கலைஞர், ”அன்பு அறிவிப்பாளர்” அப்துல் ஹமீத் தனது பங்களிப்பை நூலாகவும் வெளிக்கொணர்ந்துள்ளார்.

அவரது எழுத்தில் உருவான இந்நூல் அமெரிக்கா வாழ் தமிழ் மக்கள் மத்தியில் வெளியிடப்படுவது சிறப்புக்குரியது.

ஓர் ஊடகவியலாளரது வாழ்க்கை அனுபவமாகமட்டுமன்றி, இலங்கை வானொலி வரலாறு குறித்த ஒரு சிறந்த ஆவணப் பதிவாகவும் இந்நூல் விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..!

“வானலைகளில் ஒர் வழிபோக்கன்”அன்பு அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்களின் நூல் வெளியீட்டின் போது. எனது நீண்டகால ஆசை நிறைவேறியது.

பாடசாலை காலங்களில் இருந்து இவரைச் சந்திக்க வேண்டும் கதைக்க வேண்டும் என்று ஆனால் இன்று தான் அதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. இந்நாள் ஒரு பொக்கிஷம். நம் மொழியாம் தமிழ் மொழியை உலகெங்கும் கொண்டு சென்று கொண்டிருப்பவர்

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...