இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரிகர்கள் குழு புனித மக்கா நோக்கி பயணம்!

Date:

இன்று (04) ஞாயிற்றுக்கிழமை காலை  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 63 யாத்ரிகர்களை உள்ளடக்கிய இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரிகர்கள் குழுவிற்கான பிரியாவிடை நிகழ்வில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஃ காலித் ஹமூத் அல்-கஹ்தானி  கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் புத்தசாசன  சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இசட். ஏ. எம். பைசல், இலங்கை ஹஜ் கமிட்டியின் தலைவர் இப்ராஹிம் சாஹிப் அன்சார், சமய விவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கையின் ஹஜ் முகவர் நிலையங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும், ஹஜ் கிரியைகளை நிறைவேற்றுவதற்காக வருகை தரும் ரஹ்மானின் விருந்தினர்களை சவூதி அரசாங்கம் பெரிதும் வரவேற்பதாகவும், இரு புனிதஸ்தலங்களினதும் பாதுகாவலரின் அரசாங்கம் அல்லாஹ்வின் வீட்டிற்கு வருகைதரும் யாத்ரிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது என்றும் தூதுவர் தெரிவித்தார்.

மேலும், அவர்களின் வசதியை உத்தரவாதப்படுத்துவதற்கும்இ தமது ஹஜ் கிரியைகளை மிகவும் எளிதாக நிறைவேற்றுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கை ஹஜ் யாத்ரிகர்களுக்கான ஏற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பில்இ சமய பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் இலங்கை ஹஜ் குழுவின் அதிகாரிகள் தூதரகத்திற்கு வழங்கிய ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என்றார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...