உள்நாட்டு பிரச்சினைகளை ஜெனிவாவுக்கு கொண்டு செல்லப்போவதில்லை: அரசாங்கம் தீர்மானம்

Date:

இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைகளை தொடர்ந்தும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு எடுத்துச் செல்வதில்லை என அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கம் ஸ்தாபித்துள்ள உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் ஊடாக உள்நாட்டு பிரச்சினைகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி அவற்றுக்கு தீர்வை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழுவின் தலைவராக சட்டத்தரணி அசங்க குணவர்தன செயற்பட்டு வருகிறார்.

வருடந்தோறும் ஜூன் மாதத்தில் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் தொடர்பான மாநாட்டில் ஆணைக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதுடன் அது தொடர்பான தீர்மானத்தை அமெரிக்க உட்பட மேற்குலக நாடுகள் எடுக்கும் என கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் இது இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கை என சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...