இன்று (04) அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் போதுமான எரிபொருள் இருப்பு அனுப்பப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் சிலோன் இந்தியன் ஒயில் கம்பனிக்கு சொந்தமான பவுசர்கள் மூலம் எரிபொருள் விநியோகம் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அமைச்சர் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், 121 பெட்ரோல் நிலையங்கள் மே 27 முதல் 31 வரை எந்த ஆர்டரையும் வைக்கவில்லை என்றும், பல பெட்ரோல் நிலையங்கள் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க போதுமான ஆர்டர்களை வைக்கவில்லை என்றும் தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த விதிமுறைகளை மீறிய எரிபொருள் நிரப்பு நிலைய அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான ட்விட்டர் செய்தி வருமாறு;
CPC & LIOC are continuing to distribute fuel islandwide & there will be sufficient fuel stocks available in all Fuel stations by Sunday. CPC is also reviewing data of fuel orders placed & stocks maintained of all fuel stations in the past week. Initial reports have identified… pic.twitter.com/hgJP6fEehR
— Kanchana Wijesekera (@kanchana_wij) June 3, 2023