கொழும்பில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயம்!

Date:

அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக கொழும்பு மாவட்ட செயலகம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

மேலும் இது தொடர்பில் தெரியவருவதாவது,

கொழும்பு, திம்பிரிகஸ்சாய, கொலன்னாவ, இரத்மலானை மற்றும் மொரட்டுவ ஆகிய பகுதிகளே இவ்வாறு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் சுமார் 908 வீடுகள் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த அடுக்குமாடி கட்டிடங்கள் நகர அபிவிருத்தி அதிகார சபை, கொழும்பு மாநகர சபை, தொழில் திணைக்களம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.

கொழும்பு மாவட்ட செயலகத்தின் பிரகாரம் கொழும்பு பிரதேச செயலகத்தில் 420 வீடுகளும், திம்பிரிகஸ்யா பிரதேச செயலகத்தில் 120 வீடுகளும், கொலன்னா பிரதேச செயலகத்தில் 60 வீடுகளும், இரத்மலானை பிரதேச செயலகத்தில் 01 வீடும், மொரட்டுவை பிரதேச செயலகத்தில் 307 வீடுகளும் இடிந்து விழும் நிலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்களாகும்.

கொழும்பு மாவட்டத்தில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் பாழடைந்த நிலையில் காணப்படுவதாகவும் இக்கட்டிடங்கள் பாவனைக்கு தகுதியற்றவை எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...