தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குரல்- 2023: ஆக்கங்கள் கோரப்படுகின்றன!

Date:

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக, சமூகவியல் ஆய்வுகளுக்கான மாணவர் ஆய்வு மன்றம் தனது ஆய்வுக்குரல் சஞ்சிகையினை வருடாந்தம் வெளியிட்டு வருகின்றது.
அந்த வகையில் இவ்வருடம் அதன் 5ஆவது சஞ்சிகை வெளியிடப்பட உள்ளதால் அதற்கான தரமான ஆய்வுக் கட்டுரைகள் ஆர்வமுள்ளவர்களிடமிருந்து கோரப்படுகின்றன.
( நீங்கள் விரும்பிய சிறந்ததோர் தலைப்பின் கீழ் தமிழ், அறபு, ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம்.
GUIDELINES

A4 இல் 10 பக்கங்களுக்கு மேற்படாத வன்னம் தரமான ஆய்வுக் கட்டுரைகளாக இருத்தல் வேண்டும்.

ஆய்வுக் கட்டுரைகள் யாவும் பின்வரும் எழுத்து வடிவில் தட்டச்சு செய்யப்பட்டு soft copy ஆக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

Tamil font :- kalaham (font size 12)
English font :- Times new Roman (font size 12)
Sinhala font :- Iscola Potha (font size 12)
Arabic font :- Traditional (fontsize 16)
ஆய்வுக் கட்டுரைகளின் ஒழுங்கமைப்பு:

ஆய்வுத் தலைப்பு, ஆய்வாளர்களுடைய பெயர் விபரம், பிரதான ஆய்வாளருடைய மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம் முகவரி, மற்றும் முன்னுரை, ஆய்வுப் பிரச்சினை, ஆய்வின் நோக்கம், ஆய்வு முறையியல், ஆய்வின் பிரதான அம்சங்கள், முடிவுரை மற்றும் உசாத்துணைகள் என்பவற்றை உள்ளடக்கியதாக ஆய்வுக்கட்டுரைகள் ஒழுங்கமைக்கப்படல் வேண்டும்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், ஏனைய பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உயர் கல்வி நிறுவன மாணவர்கள் என அனைவரும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க முடியும்.

மாணவர்கள் தனியாகவோ அல்லது விரிவுரையாளர்களுடன் இணைந்தோ ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க முடியும்.

உங்கள் ஆவணத்தில் ஆய்வுக் கட்டுரையின் தலைப்பினை இட்டு Save செய்து MS Word (doc/docx) வடிவத்தில் எமக்கு பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (srfmagazine2022@gmail.com)

அனைத்து ஆய்வுக் கட்டுரைகளும் விரிவுரையாளர்களால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு தரமான ஆய்வுக் கட்டுரைகள் மாத்திரம் சஞ்சிகையில் பிரசுரிக்கப்படும்.

அனைத்து தரமான ஆய்வுக் கட்டுரைகளும்  2023.06.30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

குறிப்பு:- guidelines ற்கு வெளியில் அமைந்த ஆய்வுக் கட்டுரைகள் எம்மால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
மேலதிக விபரங்களுக்கு
Salihu Fahmitha :- 0755628556
Akeef Nasoor :- 0754059064

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...